ஜம்மு காஷ்மீரில் பஹால்கமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு டென்ஷன் எகிறியுள்ளது. எல்லை பகுதியிலும் இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி சண்டையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிட்டதையடுத்து, 577 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியா ஜெனரல் சையது ஆசிம் முனீர் பாகிஸ்தான் நாட்டை விட்டு ஓடி விட்டதாக சோசியல் மீடியாவில் சிலர் செய்திகளை கசிய விட்டு வருகின்றனர். மேலும், சிலர் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் குடும்பத்துடன் பங்கரில் பதுங்கயதாகவும் சொல்லலப்பட்டது.
இந்த நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமரின் எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீரும் உள்ளார்.
அந்த புகைப்படத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 26ம் தேதி அபாதாபாத்திலுள்ள பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமி பட்டமளிப்பு விழாவில் பிரதமரும், ராணுவ தளபதியும் பங்கேற்றனர். அப்போது , எடுக்கப்பட்ட குழு புகைப்படம் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.