பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் தொழுகையின்போது பள்ளி வாசலில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகினர், மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் இன்று(மார்ச்.04) தொழுகையின்போது வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 30 பேர் பலியாகினர், மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த 50 பெரும் அருகில் உள்ள மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது