‘Google,FaceBook,Twitter உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை எச்சரிக்கும் பாகிஸ்தான் அரசு’ காரணம் இதுவா?

பாகிஸ்தான் அரசு அனைத்து விதமான சமூகவலைத்தளங்களுக்கும் புதிய தணிக்கை விதிகளை கொண்டு வந்துள்ளது.

தற்போதைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.பலரையும் சமூகவலைத்தளங்கள் ஆட்கொண்டுள்ளன. பலரும் சமூகத்தில் நடக்கும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதனை சமூகவலைத்தளங்கள் மூலமாக தான் தெரிந்துகொண்டு வருகின்றனர். இதில் Google, FaceBook மற்றும் Twitter ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த சமூகவலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள புதிய தணிக்கை விதிகளின்படி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களிடம் பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் கேட்டால் அதை சமூகவலைதள நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும்

மேலும் குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதள நிறுவனங்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும் அதில் தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களையம் நிறுவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தணிக்கை விதிகளை 3 மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லையேல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 3 மில்லியன் டாலர் அபராதமாக விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் அறிவிப்புக்கு எதிராக Google, FaceBook, Twitter, Amazon மற்றும் Apple உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் சார்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “பாகிஸ்தான் அரசு புதிதாக அறிவித்துள்ள தணிக்கை விதிகளை பாகிஸ்தான் அரசு திருத்த வேண்டும் எனவும், பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது சேவைகள் நிறுத்தப்படும்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளன.

What do you think?

‘T20 போட்டியில் வெறும் 37 பந்துகளில் சதம்’ ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா!

‘Magician-ஆக மாறிய பிரபல நடிகை சன்னி லியோன்’ வைரலாகும் வீடியோ உள்ளே:-