February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending உலகம்

பாலியல் தொந்தரவு; நடுத்தெருவில் தூக்கு! – இதுதான் சட்டம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி, இனி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்காக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பாகிஸ்தானிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அந்நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து இதுதொடர்பான புதிய சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முஹம்மது கான், குழந்தைகளுக்கான பாலியல் குற்றவாளிகளை நடுத்தெருவில் தூக்கிலிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று பேசினார். அவரின் இந்த கருத்துக்கு அவையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர், இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

அயலான் அப்டேட் – முதல் முறையாக மூன்று வேடங்களில் S K?

Digital Team

பில்கேட்ஸின் அதிநவீன சொகுசு கப்பல் 4,500 கோடியா?

Digital Team

வெளியானது ஜாமியா மாணவர்களை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

Digital Team

மத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்!

Digital Team

இட ஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் முழு அடைப்பு

Digital Team

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு !

superadmin
You cannot copy content of this page
Madhimugam