‘அரண்மனை-4’ ரெடி..!! ஏப்ரலில் ரிலீஸ்..!! ஹிப் ஹாப் ஆதி இசை..!!
சுந்தர்.சி இயக்கத்தில் 2014-ம் ஆண்டு அரண்மனை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில் இது அமோக வெற்றி பெற்றது.
இதன் வெற்றி காரணமாக,2016-ல் ‘அரண்மனை-2’ திரைப்படத்தை த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து சுந்தர் சி இயக்கினார். அந்த படமும் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சுந்தர்.சி, அரண்மனை 4 திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரண்மனை 4-ல் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முதல் மூன்று பாகங்கள் போலவே அரண்மனை 4-வும் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பார்த்து மகிழும் வலையில் இப்படம் அமைந்திருக்கும்.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையில் அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என திரைப்படகுழு முதல் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.