“பான் இந்தியா சாக்கோ பாய்., பெண்களின் காதல் மன்னன்.. ”
மலையாள நடிகர் மம்முட்டியின் இரண்டாவது மகனான துல்கர் சல்மான் ஆரம்பக் கல்வியை கேரளா மற்றும் சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் முடித்தார். அதன் பின் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. அமல் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
சினிமாவில் அறிமுகம் :
கடந்த 2012ம் ஆண்டு வெளியான “செகண்ட் ஷோ” என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் 2015ம் ஆண்டில், “சார்லி” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை பெற்றார்.
ஒரு நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் தொழிலதிபராகவும் முன்னேறினார்.
தமிழ் சினிமா :
இவர் கடந்த 2014ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழில் காதநாயகனகா அறிமுகமானார்.
முதல் படம் இவருக்கு வெற்றி படமாக இல்லை என்றாலும் இரண்டாவது படமான ஓ காதல் கண்மணி என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது…
அதை தொடர்ந்து கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால், நடிகையர் திலகம், சீதா ராமம், என வெற்றிப் படங்களை கொடுத்து பல பெண்கள் மனதில் கனவு நாயகனாகினார். இதனால் இவரை பலரும் சாக்லட் பாய் என்று அழைப்பார்கள்.
பல படங்கள் மூலம் நம்மை ரசிக்க வைத்து கன்னி பெண்கள் மனதில் ஆட்டோகிராப் போட்ட.. சாக்லேட் பாய். துல்கர் சல்மான் அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..