அதிமுக வில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இராட்டை தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்து வாக்குவாதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓபிஎஸை சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், அதிமுக தற்போது தலை இல்லாமல் உள்ளது. திமுகவை எதிர்த்து போராடும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை அதேபோல் துரோகிகளிடம் இருந்து இயக்கத்தை மீடெடுக்கும் கொள்கையிலும் எந்தா மாற்றமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை பற்றி தற்போது ஓபஎஸ் புரிந்து கொண்டார். தன் தவறுகளில் இருந்து உணர்ந்ததை அடுத்து அனைவரயும் ஒன்றிணைப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒருவர் தன்னுடைய தவறை உணர்ந்த பிறகு அவருக்கு உறுதுணையாக இருப்பது என்பதில் தவறு இல்லை என்றும் பன்னிர்செல்வத்தை சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இருவரும் கூடிய விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது. தினகரன் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துவருகின்றனர்.