‘ஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குனர் பா.ரஞ்சித்’

இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய திரைப்படங்கள் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். அதன்பின்பு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து காலா,கபாலி என 2 படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் பரியேறும் பெருமாள், இரண்டாவது உலகப்போரின் கடைசி குண்டு என்று 2 தரமான படங்களை வழங்கியுள்ளார்.

பா.ரஞ்சித்துக்கு ஏற்கனவே அனிதா என்ற மனைவியும், மகிழினி என்ற மகளும் இருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அவருக்கு 2வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு மிளிரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக குழந்தை பிறந்துள்ளதை அடுத்து பா.ரஞ்சித் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்தாக ஆர்யாவை கதாநாயகனாக வைத்து குத்துச் சண்டையை மையப்படுத்திய சல்பேட்டா என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

விஜய் இல்லை அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்!

“போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை” – அமைச்சர் உதயக்குமார்