பாரிஸ் ஒலிம்பிக் போட்டி..! 206 நாடுகள் பங்கேற்பு..! இந்திய வீராங்கனை தேர்வு..!
33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்றிரவு கோலாகலமாக தொடங்கிய நிலையில் ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் முதல் தங்கத்தை சீனா தட்டிச் சென்றது
பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான இன்று 14 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் 10 மீட்டர் ஏர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தகுதிச் சுற்று போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை மற்றும் ரமீதா – பபுதா அர்ஜூன் ஆகிய இரண்டு அணிகள் பங்கேற்றன. ஆனால் தகுதி சுற்றில் ரமிதா – பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6ம் இடத்தைப் பிடித்து வெளியேறியது.
அதே போல் இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்து வெளியேறின. சீனா (632.2), தென் கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), ஜெர்மனி (629.7) ஆகிய 4 நாடுகள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறின.
இதில் ஜெர்மனியை தோற்கடித்து கஜகஸ்தான் வெண்கலத்தை வென்றது. அதே போல், சீனா தங்கத்தையும் தென் கொரியா வெள்ளியையும் வென்றது. அதனை தொடர்ந்து 10மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்து இந்திய வீராங்கனை இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..