15 Total Views , 1 Views Today
பாராளுமன்ற ஊழியர்கள் தாமரைச் சின்னத்தை பச்சை குத்தாமல் இருந்தால் சரி, அது நைட்டி போல் சுடிதார் குர்தா போல் உள்ளது- சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம் பேட்டி
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு குறித்து பேசுவது வழக்கம்., சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் நம்மளுடைய சனாதனம் வடமாநிலத்தில் சனாதனத்திற்கு வேறு ஒரு புரிதல் இருக்கலாம். காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை எம்மதமும் சம்மதம் மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறோம்.
திமுகவில் ஜாதிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு
திமுகவை ஜாதி அரசியல் செய்யும் கட்சி என்று சொல்லக்கூடாது., திமுகவின் தலைமையில் உள்ளவர்கள் தங்களது ஜாதியை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. திமுக தலைவரான கலைஞருடைய பலமே அதுதான்., அவர் எந்த சமுதாயத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
திமுக மாவட்ட செயலாளர் அவர்கள் விவகாரம் குறித்து அக்கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்.
அதேபோல் பாஜக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் புள்ளி பட்டியல் அறிவிக்க வேண்டும். மற்ற கட்சிகள் குறித்து நான் எப்படி பதில் அளிக்க முடியும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் திமுகவுடனனா கூட்டணி வலுமையாகவும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வெல்வோம் என்றார்.
நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய உடைகள் தாமரைச் சின்னம் குறித்த கேள்விக்கு
நாடாளுமன்றத்தில் வேலை பார்ப்பவர்கள் கையில் தாமரை சின்னம் பச்சை குத்தாத வரை நல்லது. அரசியல் கட்சி சார்ந்த சின்னங்களை பாஜக அரசு ஆடைகளில் கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த உடையின் போட்டோவை பார்த்தேன் சுடிதார் குர்தா போல் உள்ளது.
எச் ராஜா காவல் துறைக்கு காவி உடை கொடுப்போம் என்ற கேள்விக்கு
பாஜகவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்., ஆட்சிக்கு வந்தால் காவலர்களுக்கு கூட காவி உடை வழங்குவோம் என்று கூறுவது அவர்களின் உள் மனதில் இருக்கும் கொள்கை மற்றும் விஷம கருத்து இதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக மக்கள் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அந்த கட்சிக்கு எந்த காலத்திலும் வழங்க மாட்டார்கள்.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காவிரி நீர் பங்கெட்டில் முரண்பாடா என்ற கேள்விக்கு,
இந்தியா என்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் காவிரி விவகாரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதற்குத்தான் காவேரி மேலாண்மை ஆணையம் உள்ளது., நீதிமன்றம் உள்ளது அங்கு சென்று தீர்வு காண வேண்டும். இந்தியா என்பது பாஜகவுக்கு எதிரான வலுவான ஒரு கூட்டணி.
தமிழகத்தில் தொடரும் ஈடி ரெய்டுகள் குறித்த கேள்விக்கு
இனி அடிக்கடி நடைபெறும், தேர்தல் நெருங்குவதால் இடிரைடுகள் அதிகமாக தொடரும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார்.
இதையும் படிக்க: ஊழியர்களுக்கு தாமரை சீருடை… பாஜகவின் அடுத்த பகீர் செயல்திட்டம்..!