ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்..!! ஏன் தெரியுமா..?
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர் என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளுநர் ரவி தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று காலை கொடியேற்றம் முடிந்த பின் அன்று மாலை ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என் ரவி ஆகஸ்ட் 15ம் தேதி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். அதற்காக தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கு விருந்தில் பங்கேற்க பதற்கான அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளது.. தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே சில பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.., ஆளுநர் ரவியின் பதவிக்காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவு பெறுவதாக இருந்த நிலையில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தமிழகத்தின் ஆளுநர் மட்டும் மாற்றம் செய்யாமல் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது..
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமனம் செய்வதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும்., பதவிக்காலம் முடிந்த ஆளுநராக தொடர்வது அவர் இருப்பது அரசமைப்புக்கு மிக எதிரானது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.. மேலும் தமிழக மக்களின் நலனுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் இதுவரை தமிழகத்திற்காக எதுவும் செய்யாமல் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்..
காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..