பருத்திவீரன் படத்தின்மூலம் பிரபலமடைந்த நடிகர் செவ்வாழைராசு உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
பருத்திவீரன் படத்தில் ‘பிணந்தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. அதன்பின் மைனா, கந்தசாமி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராசு சிகிச்சை பலனின்றி இன்று மதுரையில் காலமானார். 70 வயதான செவ்வாழை ராசுவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காமெடி நடிகர்களான மயில்சாமி, மனோபாலா ஆகியோரது மறைவில் இருந்து ரசிகர்கள் மீளாத நிலையில் தற்போது இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.