இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 33,245 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று(மார்ச்.21) பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகியது. கடந்த 18ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, கடந்த 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று(மார்ச்.21) தொடங்குகியது. சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து,சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ” தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் .
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலைப் பாதுகாப்புக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; சாலையில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னுயிர் காப்போம் ,நம்மை காப்பும் உள்ளிட்ட 48 உயிர்காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், சீரான சாலைகள், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணிநேரம் அவசர சிகிச்சை, சாலை பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
18.12.2020 முதல் 18.3.2022 வரை சாலை விபத்துகளில் சிக்கி அரசு மருத்துவமனைகளில் 29,142 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேர் என மொத்தம் 33,247 பேருக்கு முதல் 48 மணிநேரம் இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரூ.29.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே நோக்கம்.
மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ‘நற்கருணை வீரன்’ விருதுடன் ரூ. 5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.