சாலை மறியலில் இறங்கிய அரியலூர் மக்கள்..!! போராட்டத்தை கைவிட காரணம் என்ன..?
ஜெயங்கொண்டம் அருகே கீழமைக்கல்பட்டி கிராமத்தில் 4 மாதமாக காலமாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த கீழமைக்கல்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் கடந்த 4 மாதமாக காலமாக குடிநீர் சரியாக வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதில் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் பொதுமக்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..