பொன்னேரி மக்களே இங்க மட்டும் சாப்பிட போயிடாதீங்க..!! ஏற்கனவே 20 பேர்..!!
பொன்னேரியில் பிரபல தனியார் பிரியாணி கடையில் பிரியாணி, சிக்கன் பிரியாணி வாங்கி உட்கொண்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3பேர் மருத்துவமனையில் அனுமதி.
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் ஹை ரோடு., NGO நகர் எக்ஸ்டெண்ஷன்., பொன்னேரியில் இயங்கி வரும் பிரபல எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணிகடை ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. தற்போது இந்த பிரியாணி கடையில் அசைவ உணவின் தரம் குறைந்து., சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கபடுவதாக வாடிக்கையாளர்கள் அவ்வப்போது புகார் அளித்துள்ளனர். ஆனால் அதனை பொருட் படுத்தாத எஸ்.எஸ்.ஹைதராபாத் நிறுவனம் மீண்டும் அதே தவறை செய்துள்ளது
கடந்த செப்டம்பர் 16ம் தேதி அன்று பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணிகடையில் பிரியாணி மற்றும் சிக்கன் லெக்பீஸ் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது., அதில் 7 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர்., அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..,
இந்த கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டதால் தான் வாடிக்கையாளர்களுக்கு உடல்நலக்குறைவு எற்பட்டுள்ளதகாவும் பணத்திற்காக உணவை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து இருப்பதாக கூறி குற்றச்சாட்டுகள் அளித்துள்ளனர்.. மேலும் பெருமளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பாக உணவு பாதுகாப்பு துறையினர் இந்த பிரியாணி கடையில் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..