வண்டலூரில் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்..!! அரசுக்கு கோரிக்கை..!!
கானும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 23,000த்திற்கும் மேற்பட்டோர் வருகை. குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கானும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி வேலூர் திருபத்தூர் சேலம் திண்டிவனம் பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 23,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சென்று விலங்குகளை பார்வையிட்டதோடு அங்காங்கே ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
அதிக பார்வையாளர்கள் வருகையால் உயிரியல் பூங்காவில் 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். மேலும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக கைகளில் அடையாள அட்டை ஒட்டி அனுப்பட்டதோடு கூடுதலாக கழிப்பறைகள், தாய் பாலூட்டுமிடம், ஓய்விடங்கள், உணவகங்கள், மருத்துவ முகாம்கள், தீயனைப்பு வாகனம், போன்ற ஏற்பாடுகள் பூங்கா நிர்வாகம் சார்பில் செய்யபட்டது.
இதனிடையே 200ரூபாய் கட்டணம் என்பது குடும்பத்துடன் வரும் போது சிறமமாக இருப்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாம்பு பண்ணைகள் மூடபட்டிருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..