முடி உதிர்வை தடுக்கும் டீ வகைகள்..!
க்ரீன் டீ
பொதுவாக க்ரீன் டீயில் பலவிதமான நன்மைகள் இருக்கிறது.இது இன்சுலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இந்த க்ரீன் டீயை குடிக்கலாம்.
ரோஸ்மேரி டீ
தலையில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே தலைமுடி எந்த பிரச்சனைகளும் இன்றி நன்றாக வளரும், அதற்கு இந்த ரோஸ்மேரி டீயை அடிக்கடி பருகி வர இரத்த ஓட்டம் சீராகி முடி நன்றாக வளரும்.
ஜாஸ்மீன் டீ
மல்லிகையில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் குடித்துவந்தால் முடி உதிர்வை தடுக்கலாம்.
இலவங்கப்பட்ட டீ
இலவங்கப்பட்டையில் அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.
உடலில் இருக்கும் குளுக்கோஸ் எளிமையாக உறிஞ்ச உதவுகிறது. இதனால் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.
வெந்தய டீ
உடலில் நீர்ச்சத்து இல்லாதது மற்றும் அதிகபடியான சூடு இருப்பதினால் கூட கூந்தல் உதிர்வு ஏற்ப்படும்.
எனவே இதனை வாரத்தில் ஒரு முறையேனும் டீ செய்து குடிக்க வேண்டும்.
