21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது …!

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது என்ற புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புகையிலை பொருட்களால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் அமைந்துள்ள இடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் சில கட்டுப்பாடுகளை இதில் கொண்டுவருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக ஆய்வு நடத்துவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு குழு ஒன்று அமைத்து இருந்தது. அந்த குழுவினர் விரிவான ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

அதில், ஏற்னவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள் விற்கக்கூடாது என்று தடை இருக்கிறது. அதை 21 வயதாக அதிகரிக்கும்படி பரிந்துரைத்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றால் விதிக்கப்படும் அபராத தொகையை இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும், பொது இடத்தில் புகை பிடித்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனை விரைவில் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

What do you think?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா…!

அதிபர் ட்ரம்பை வரவேற்ற பிரதமர் மோடி!