பத்திரப்பதிவை கண்டு அஞ்சும் மக்கள்..!! அரசின் அதிரடி முடிவு..!!
சொத்துக்கள் வாங்குவதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கிறது.., ஒரு வீடு அல்லது காலி மனை வாங்க அதற்கான பணத்தை குருவி சேர்ப்பது போல சிறுக சிறுக சேர்த்து வாங்க வேண்டி இருக்கிறது. அப்படி சிறுக சிறுக சேர்த்து வைக்கும் பணத்தில் வாங்கும் மனையை பத்திர பதிவு செய்தால் மட்டுமே பிற்காலம் வரை உபயோகமாக இருக்கும்.
அப்படி ஒரு சாமானிய மனிதர் ஒருவர் வாங்கிய புது வீட்டை பத்திர பதிவு செய்வதற்காக பத்திர பதிவு துறைக்கு சென்றுள்ளனர். ஊழல் தற்போது பல இடங்களில் தலைவிரித்து ஆடுகிறது.., ஒரு சில மக்கள் வேலை சுலபமாக முடிய வேண்டும் என்பதற்காக அலுவலர்கள் கேட்கும் ஊழல் பணத்தை கொடுத்து விடுகின்றனர்.
அந்த வகையில் இந்த சாமானியரும் பத்திரப்பதிவு செய்யும் பொழுது, அலுவக அதிகாரி லஞ்சம் கேட்டுள்ளனர். வீட்டு மனையே 8 லட்சம் ரூபாய் தான், ஆனால் அதை பத்திரமாக பதிவதற்கு மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.
அதிர்ந்து போன அந்த சாமானியர்.., எதற்கு ஐயா இவ்வளவு காசு மொத்தம் 80 ரூபாய் மட்டும் தான் வருகிறது என கேட்டதற்கு.
இங்க எல்லாம் அப்படி தான் இருக்கும் நாங்க கேட்குற காச கொடுத்த சீக்கிரமே முடிச்சுகலாம் இல்லையா எங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ தான் நாங்க கையொப்பம் இடுவோம் என கூறியுள்ளனர். அவர் சொன்ன அந்த வார்த்தை அந்த சாமானியரை மட்டுமின்றி அங்கு பத்திரப்பதிவு செய்ய வந்த பலரையும் பாதித்துள்ளது.
ஊழல் செய்வது, லஞ்சம் கேட்பது தவறு என இருக்கும் இந்த காலத்தில் அதிலும் அநியாயமாக லஞ்சம் வாங்குவது தவறு புலம்பி கொண்டே பத்திரபதிவு செய்துள்ளனர்.
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும்
இயக்குநர் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை, எண், 293. எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர், சென்னை-600016
போன்: 044-22310989, 22321090, 22321085, 22342142.
காவல் துணை கண்காணிப்பாளர் ஊழல் மற்றும் கண்காணிப்புத் பிரிவு சென்னை போன்: 044-22346050.
இணையதளம் : https://www.dvac.tn.gov.in/
மேற்கண்ட எண்ணிற்கு அல்லது இணையதளம் மூலமாகவோ ஊழல் அல்லது லஞ்சம் வாங்குவோர் பற்றி தெரிவித்தால் ஒரு மணி நேரத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..