சமையலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மிளகு..!!
சமையலில் மிளகு வைத்து சமைக்காத உணவுக்குள் குறைவு தான். “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று சொல்லுவார்கள்.., அப்படி நன்மை தரும் இந்த மிளகின் சில மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.
* தினமும் இரண்டு வால் மிளகு சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி நீங்கும்.
* வால் மிளகில் ரசம் வைத்துக் குடித்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.
* மார்பு சளி அதிகம் உள்ளவர்கள்.., காரப்பொடி மீனில் மிளகு அரைத்து குழம்பு வைத்து சாப்பிட்டால் சளி நீங்கும். அசைவம் விரும்பாதவர்கள் காரக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.
* வால் மிளகில் நீரில் கரையாத நார்ச்சத்து அதிகம் இருக்கும்.
* வால் மிளகில் குளிர்ச்சி தன்மை அதிகம்.
* அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் , வால் மிளகை குறைவாக பயன் படுத்தலாம். அதிக காரத்தன்மை இருப்பதால், இன்னும் வலி உணர்வை தூண்டி விடும்.
மேலும் இதுபோன்ற பல மருத்துவ குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி