உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் பார்வதி தேவி மயில் உருவில் சிவனை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.முன்னதாக ஶ்ரீஅபயாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு நவராத்திரியின் கொலுகாட்சியை தரிசனம் செய்தார்கள்.
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான கனமழை கொட்டி தீர்த்ததால் குளிர்ச்சியான சூழல் உருவாகி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பெருவளையம் ஊராட்சியில் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழில் அதிபருமான ரத்தன் டாட்டாவின் உருவப்படத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி தற்போது குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இந்த ஏரியில் டன் கணக்கில் குப்பை கழிவுகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இறந்த மாட்டை ஏரியில் வீசி சென்று உள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தும் அலட்சியமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் விஷ வண்டுகள் 25 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியரை கொட்டியுள்ளது. பின்பு ஆசிரியர்கள் பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா நெமிலி, தாசில்தார் ஜெயபிரகாஷ், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.