“பேஷ் பேஷ் மாமா” விருதுநகரில் விஜயபிரபாகரனுக்கு குவியும் பாராட்டு..!!!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட உள்ளநிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் கலை கட்டி வருகிறது.
அந்த வகையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் வேட்பாளர்கள் :
விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தேர்தல் களத்தில் சூடு பிடித்துள்ளது..
இந்நிலையில், தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் சேர்ந்துபிரச்சாரம் மேற்கொண்டார்.
குவியும் பாராட்டு :
அப்போது விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடை ஒன்றில், ராஜேந்திர பாலாஜி தானே வந்து டீ போட்டு வேட்பாளர் விஜய பிரபாகர் மற்றும் கட்சியினருக்கு கொடுத்துள்ளார். அதனை கொடுத்த விஜய பிராபாகரன்.
“பேஷ் பேஷ் மாமா” டீ சூப்பரா இருக்கு என பாராட்டியுள்ளார்.
இவரின் இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அப்பாவை போல மகனும் மக்களிடம் இயல்பாகவும் கனிசமாகவும் நடந்துகொள்கிறார். மற்றவர்களை போல தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டுமே என்பதற்காக மட்டும் மக்களிடம் பேசும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மக்களின் மக்களோடு பழகும் இவருக்கு கேப்டனின் குணம் என்று அங்கிருந்த மக்கள் பாராட்டியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..