மதுரை மாவட்டத்தை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி அன்று மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த மனுவில் நேதாஜியின் பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைநகரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸிற்கு நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை அளித்துள்ளது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு விடுமுறை என்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்த விஷயம் மத்திய அரசின் கொள்கை சார்ந்த விசியத்தில் உச்சகநீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மத்திய அரசின் கொள்கை சார்ந்த விஷ்யங்களில் தலையிட முடியாது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.