ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க முதலமைச்சரிடம் மனு

ஈரானில் இருக்கும் தமிழக மீனவர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கக்கோரி ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை முதலமைச்சரிடம் நேரில் மனு அளித்தார்.

ராதாபுரம் உவரி கிராமத்தை சேர்ந்த திவான், சகாய ராஜேஷ், பினு உள்ளிட்ட 15 தமிழக மீனவர்கள், ஈரானில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தொலைபேசி மூலமாக தங்களது குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு, ஈரானில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தங்களை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினர் கொடுத்த மனுவை, ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை முதலமைச்சரிடம் நேரில் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

What do you think?

மாஸ்டர் second single – குத்து போட ரெடியா?

கொரோனாவை ஓவர்டேக் செய்யும் காலரா – உஷார் மக்களே உஷார்..!