சென்னையில் 126வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது.
இதனை தொடர்ந்து, கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 139 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்தது. அதன்பின், அடுத்தடுத்த நாட்களில் பங்கு சந்தைகளின் மதிப்பு உயர்வடைந்தது.