‘PhonePe சேவை முடக்கம்’ பின்னணி என்ன?

YesBank-ன் பங்குதாரரும்,பிரபல டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலியான PhonePe-ன் சேவை முடங்கியுள்ளது.

Yes Bank வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியால் கடந்த ஆண்டு மட்டும் 1, 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “Yes Bank-யின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு Yes Bank நிர்வாகம் செயல்படும் என்றும் மார்ச் 5 முதல் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வரை Yes Bank-ல் பணபரிவர்த்தனை செய்வதற்கு மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தித்துள்ளது.

இந்நிலையில் Yes Bankன் பங்குதாரரான PhonePe நிறுவனமும் முடங்கியுள்ளது. Yes Bank-ல் பணபரிவர்த்தனை செய்வதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின் எதிரொலியால் PhonePe-யும் முடங்கியுள்ளதாக கூறபடுகிறது. இதுகுறித்து பேசிய PhonePe நிறுவனத்தின் செயல் அதிகாரி சமீர் நிகாம், “இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

ஆளுநரின் துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவர் நியமனம்- வைகோ கண்டனம்!

சிக்கன்,மட்டன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வருமா?