‘மீண்டு(ம்) வந்த PhonePe’ மகிழ்ச்சியில் பயனாளர்கள்!

கடந்த சில நாட்களாக முடங்கியதிருந்த PhonePe தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Yes Bank வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியால் கடந்த ஆண்டு மட்டும் 1, 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. மேலும் Yes Bank-ல் பணபரிவர்த்தனை செய்வதற்கு மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் எதிரொலியாக Yes Bankன் பங்குதாரராரும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான Phonepe-யும் முடங்கியது. இதுகுறித்து பேசிய PhonePe நிறுவனத்தின் செயல் அதிகாரி சமீர் நிகாம், “இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் Phonepe செயலி செயல்பட தொடங்கியுள்ளது. இந்த தகவலை Phonepe அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் அதன் பயனாளர்களை பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Image

What do you think?

சச்சின் புகழ்ந்த 5 பெண்கள் – மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ

பாரத் பெட்ரோலியத் துறை விற்பனைக்கு – மத்திய அரசு