WTFWTF

‘கொரோனா முன்னெச்சரிக்கை’ தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதனடிப்படையில் புராதன சின்னங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கூறுகையில், “தஞ்சை பெரிய கோயிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அதே சமயம் தஞ்சை பெரிய கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

What do you think?

8,000 நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை !

‘போட்டி ரத்து’ முதல்வருடன் மோதுகிறாரா கங்குலி?