டிக்-டாக்கில் சாகசம் செய்த இளைஞர்; அறிவுரை கூறிய பியூஸ் கோயல் – Tik-Tok

ரயில் பயணத்தின்போது தேவையற்ற சாகசங்களில் ஈடுபட்டு விலைமதிப்பற்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இளைஞர் ஒருவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

டிக் டாக் வீடியோ செய்வதற்காக ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் சாகசம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்து, நூல் இழையில் உயிர்பிழைத்தார்.

இந்த வீடியோவை சுட்டிக்காட்டியுள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல், ஓடும் ரயிலில் தேவையற்ற சாகசங்களை செய்து விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

What do you think?

அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி; முதலமைச்சர் ஆவேசம் – CAB

சகோதரிக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் மகன் பகிர்ந்த வைரல் புகைப்படம்!