கிருஷ்ணருக்கு பிடித்த உப்பு சீடை..!
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி – 300 கிராம்
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – 2 டீஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு
வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் அரைத்தது
அல்லது பொடித்த மிளகு- ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய்
செய்முறை:
பச்சரிசியை சுத்தமாக நீரில் கழுவி ஒரு துணியை கொண்டு வடிகட்டி பின் அதனை ஒரு காய்ந்த துணியில் பரப்பி நிழலில் நீரை உலர்த்த வேண்டும்.
பின் அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஜல்லடை கொண்டு ஜலித்து மாவை தனியே எடுத்துக் கொள்ளவும்.
பின் பெருங்காய கட்டியை ஒரு 50 மிலி நீரில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அரைத்த பச்சரிசி மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள சிவப்பு மிளகாய் விழுது, தேவையான அளவு உப்பு, ஓமம் அரை ஸ்பூன், ஒரு ஸ்பூன் எள், வெண்ணெய், 2 ஸ்பூன் பொட்டுகடலை மாவு, 2 ஸ்பூன் உளுத்தம் மாவு, தேங்காய் துருவல் சேர்க்கவும்.
பின் அதில் கரைத்து வைத்துள்ள பெருங்காய கட்டி நீரை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் இந்த உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் ஓமம் உப்பு சீடை தயார்.
இது இன்னிக்கு கிருஷ்ணருக்கு செய்து படைங்க.. கிருஷ்ணருக்கு பிடித்த உணவு பொருட்களில் இந்த சீடையும் ஒன்று.
உங்களின் வீட்டில் உள்ள குழந்தைகளும் இந்த சீடையை விரும்பி சாப்பிடுவாங்க.