சுவையான முட்டை தொக்கு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
முட்டை – 5
வெங்காயம் – 4
தக்காளி – 7
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 6 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டு பச்சை மிளகாய்களை கீறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை ஐந்து டம்ளர் நீர் ஊற்றி அதில் ஐந்து முட்டைகளை வைத்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்து அதனை வெளியே எடுத்து ஆறவைத்து பின் முட்டையின் ஓட்டை உடைத்து உரித்துவிட்டு முட்டையின் மேல் இரண்டு கீறல் போட்டு எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் ஒரு வாணலை வைத்து அதில் ஆறு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகு அரை ஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன், சோம்பு அரை ஸ்பூன் சேர்த்து தாளித்துவிட்டு அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கிளறி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு சேர்த்து கிளறி நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக மசிந்து வெந்ததும் அதில் மிளகாய்த்தூள் ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் அரை ஸ்பூன், மீதம் இருக்கும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின் இதில் ஒன்றரை டம்ளர் நீர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக பச்சை வாசனை போகும்வரை கொதித்து சுண்டியதும் வேகவைத்த முட்டை சேர்த்து கிளறி விட வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான முட்டை தொக்கு தயார். இதை சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.