2022ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டம் சுமாராகவே இருந்தது இதற்கு காரணம் முக்கிய வீரர்களுக்கு ஏற்படும் காயம் மற்றும் சில வீரர்களின் ஆட்டத்திறன் குறைந்துள்ளதே காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பிசிசிஐ புதிய சட்டம் ஒன்றை அறிமுகபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆசியா கோப்பை, உலக கோப்பை என்று இரண்டு முக்கிய தொடங்களில் சொதப்பியது. மேலும் அணியின் முக்கிய வீரர்கள் பார்ம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பிசிசிஐ இரண்டு டெஸ்ட் அறிமுகப்படுத்தவுள்ளது அதில் ஏற்கவே இருந்த யோயோ டெஸ்ட் மற்றும் புதிதாக டெக்ஸா என்ற டெஸ்டயும் அறிமுகபடுத்தியுள்ளது.
யோயோ டெஸ்ட் என்பது 20 மீட்டர் தொலைவில் இறக்கும் இரு எல்லைகளை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் எத்தனை முறை சென்றடைகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு அந்த வீரர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற்றாலே இந்திய அணியில் விளையாட முடியும். இருப்பினும் இந்த முறை மேலும் ஒரு சோதனை பயிற்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி அதற்கு டெக்ஸா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
டெக்ஸா டெஸ்ட் என்பது வீரர்களின் எலும்புகளின் உறுதி தன்மை மற்றும் அடர்த்தி உள்ளிட்டவற்றை கண்காணிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிகிச்சையில் குறைந்த அளவே கதிர்கள் வெளியாவதால் இந்த டெஸ்ட்டை பல முறை மேற்கொள்ள முடியும் என்றும் இந்த டெஸ்ட் மூலம் வலி ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தடெஸ்ட் செய்த பின் அடுத்த 10 நிமிடத்தில் முடிவு தெரிந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலககோப்பைக்கு 20 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுத்து வருவதாகவும் அந்த வீரர்கள் இந்த ஆண்டில் நடக்க இருக்கும் 50 ஓவர் போட்டிகளில் சுழற்சி முறையில் களமிறக்கபடுவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் டெக்ஸ டெஸ்ட் முறை வரும் தொடரிலிருந்து அமல்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.