நீங்கள் தாவரங்களை படுக்கையறையில் வைப்பவரா..? அப்போ இது உங்களுக்குத்தான்..!
தூங்கும் அறையில் தாவரங்களை வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லாமல் அது உடலில் ஆரோக்கியத்திற்கும் பலவித நன்மைகளை அளிக்கிறது. பெட்ரூமில் தாவரங்கள் வைப்பதினால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
நன்மைகள்:
நல்ல தூக்கம்:
படுக்கையறையில் தாவரங்கள் வைப்பதினால் அது தூக்கத்தை அதிகரிக்கிறது, காற்றை சுத்திகரித்து நல்ல தூக்கம் வர உதவுகிறது.
ஆக்ஸிஜனை அதிகரித்தல்:
தாவரமானது கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது, இதனால் நாம் தூங்கும்போது அதிக ஆக்ஸிஜன் கிடைத்து நல்ல தூக்கம் வர உதவுகிறது.
கவனம் அதிகரிப்பு:
ஆரோக்கியமான பசுமையான தாவரங்களை பார்க்கும்போது அது கவனத்தை மேம்படுத்துகிறது. இதனை படிப்பு மற்றும் அலுவலகத்தில் பெரிதும் பயன்படும்.
தாவரங்கள் வைப்பதில் கவனம் தேவை:
- ஒரு சில தாவரங்கள் சில அலர்ஜியை உண்டாக்கும். எனவே இவற்றை அறையில் வைப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
- தாவர இலைகளில் படியும் தூசி அலர்ஜியை ஏற்படுத்தும் ஆக அவ்வபோது இலைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- சில வகையான தாவரங்கள் பூச்சிகளை ஈர்க்கும் தன்மை கொண்டது எனவே இதனை அடிக்கடி பராமரிப்பது மிகவும் முக்கியம்.
- சில தாவரங்கள் செல்லபிராணிகளுக்கு கெடுதல் விளைவிக்கும், எனவே உங்கள் செல்லபிராணிகளுக்கு விஷமாகாத தாவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
படுக்கையறையில் தாவரங்கள் வைப்பதினால் இத்தகைய நன்மைகள் கிடைக்கும் அழகாகவும் இருக்கும். எனவே உங்களுக்கு ஏற்றவாறு தாவரங்களை தேர்வு செய்து வைக்க வேண்டும்.