இந்தியாவிற்காக மன்மோகன் சிங் கொண்டு வந்த திட்டங்கள்..?
மறைந்த முன்னாள் டாக்டர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிகாக தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைபடுத்தினார். மேலும் 3 முக்கிய திட்டங்களையும் அவர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
மறைந்த தலைவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இவர் ரிசர்வ் வங்கியின் தலைவராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகித்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக அவர் நிதியமைச்சராக இருந்த போது, பல்வேறு முக்கிய திட்டங்களை மக்கள் பயன் பாட்டிற்காக கொண்டு வந்தார்.
இவரது திட்டங்கள் வளர்ச்சிப் பாதைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று சொல்லலாம் அவற்றை பற்றி விரிவாகப்பார்க்கலாம்.
MGNREGA சட்டம் :
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் MGNREGA திட்டத்தை கடந்த 2005-ம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது என்று சொல்லலாம்..
அதாவது குடும்பத்தின் உறுப்பினர்களில் யாரவது ஒருவர் பணி செய்ய முன்வந்தால், குறைந்தபட்சம் 100 நாட்கள் திறமையற்ற கைத்தொழில் வேலைவாய்ப்பை வழங்க உத்தரவாதம் அளிக்கும் திட்டமாக இது இருந்தது…
இந்தியாவில் மிகப்பெரிய பொது திட்டங்களில் ஒன்றான இந்த திட்டம், கிராமப்புறங்களில் திறமையற்ற தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் உத்தரவாத்துடன் வேலைவாய்ப்பை வழங்கியது. இதனால் ஏழை மக்களின் வேலை உறுதியாக்கப்பட்டது..
அன்று முதல் இன்று வரை இத்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு கிராமபுற மேம்பாட்டுக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது என்று சொல்லலாம்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் :
இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த சட்டம் தான் இந்த தகவல் அறியும் உரிமை சட்டம், இந்த திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது
எந்தவொரு இந்திய குடிமகனும் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் குறித்து தகவல் கேட்டரியலாம். அப்படி தகவல் கோரினால் அந்த நிறுவனம் 30 நாட்களுக்குள் தகவல் அளித்திருக்க வேண்டும்.
முக்கியமாக மனுதாரரின் வாழ்க்கை அல்லது சுதந்திரத்தைப் பாதிக்கும் தகவல்கள் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சட்டத்தின் மூலம், அரசுத் தொடர்பான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம்:
“123 ஒப்பந்தம்” என்று அழைக்கப்படும் இந்த அமெரிக்கா-இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இவர்களால் கையெழுத்திடப்பட்டது.
இதில் மக்களின் நலனுக்கான பயன்பாடுகளை IAEA அமைப்பின் பாதுகாப்பின் கீழ் இயக்கவும், இதற்கு பதிலாக அமெரிக்கா இந்தியாவின் அணுசக்தி விஷயத்தில் ஒத்துழைப்பு கொடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று சொல்லலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..