பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அதிருப்தி காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் அனிதா +2 பொதுத்தேர்வில் 600 க்கு 435 மதிப்பெண் பெற்றதால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே மாணவி நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து போலீசார் அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.