“கொரோனா பயத்திற்கு NO சொல்லுங்கள்” பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி பயத்திற்கு NO சொல்லுங்கள், முன்னெச்சரிக்கைக்கு Yes சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிகையுடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அவரது டிவிட்டர் பதிவில் ” பயத்திற்கு NO சொல்லுங்கள், முன்னெச்சரிக்கைக்கு Yes சொல்லுங்கள் என்று கூறியதோடு.

தடுக்க மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதோடு தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் யாரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்கள் முழுவதும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டுள்ளன என்றும் இந்த நடவடிக்கைகள் விசாக்களை இடைநிறுத்துவது முதல் சுகாதாரத் திறன்களை அதிகரிப்பது வரை பரந்த அளவிலானவை என்று கூறினார்.

மேலும் பொதுமக்கள் பெரிய அளவில் கூடுவதை தவிர்க்கும்போது கொரோனா பரவுவதையும் தடுக்கமுடியும்” என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

What do you think?

தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

‘கனடா பிரதமரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ்’ பொதுமக்கள் அதிர்ச்சி!