இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர்!

நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை‌ 151 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்‌ என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

கொரோனா பாதித்த 151 பேரில் ராணுவ வீரரும் ஒருவர். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு நேற்று கூடியது. அதில் கொரோனா பாதிப்பது குறித்தும் அதனை எதிர்கொள்வதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதில் கொரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் மோடி பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

What do you think?

கொரோனா வைரஸ் – சென்னையில் ரயில், விமானங்கள் ரத்து!

‘அரசியல் ஆதாயம்’ தன்னை தானே அரிவாளால் வெட்டி கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர்!