சமூகவலைத்தளங்களிலிருந்து வெளியேற நினைக்கும் பிரதமர் மோடி!


அனைத்து விதமான சமூகவலைத்தளங்களிலிருந்தும் வெளியேறலாமா என்று யோசித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் எப்போதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.அவருக்கான சொந்தமான டிவிட்டர் கணக்கு மற்றும் பிரதமர் என்ற முறையில் ஒரு டிவிட்டர் கணக்கு என 2 கணக்குகளில் அவரது கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஒரு அதிரடி திருப்பமாக அனைத்து சமூகவலைத்தளங்களிலிருந்தும் வெளியேறலாமா என்று யோசித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டிவிட்டர், முகநூல், இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் உள்பட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் இருந்து வெளியேறுவது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யோசித்தேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த டிவிட்டர் பதிவு பாஜக தொண்டர்கள் உட்பட அவரை பின்தொடரும் பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. மேலும், பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தை 5 கோடியே 33 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘களத்திலேயே கெட்டவார்த்தையில் பேசிய கேப்டன் கோலி’ வைரலாகும் வீடியோ உள்ளே

‘பாஜகவில் இணைவாரா ரஜினிகாந்த்?’ நடிகர் ராதாரவி வெளிப்படையான பதில்!