‘என் சமூகவலைத்தள கணக்குகளை பெண்களுக்கு வழங்க தயார்’ பிரதமர் அதிரடி!

மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூகவலைத்தள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அனைத்து விதமான சமூகவலைத்தளங்களிலிருந்தும் வெளியேறலாமா என்று யோசித்து வருவதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்ப பிரதமர் மோடி டிவிட்டரிலிருந்து வெளியேறக்கூடாது என்று கூறி சமூகவலைத்தளங்களில் #NoModiNoTwitter, #NoSir உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை இன்று டிரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மற்றுமொரு பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த மகளிர் தினத்தன்று, எனது சமூக வலைத்தள கணக்குளை பெண்கள் நிர்வகிக்கலாம். தனது வாழ்க்கை மற்றும் பணியால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் பெண்களிடம் எனது சமூக வலைத்தளங்களை தர தயாராக உள்ளேன். இது பல லட்சம் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா, அல்லது அதுபோன்ற பெண்களை உங்களுக்குத் தெரிந்தால் #SheInspireUs என்ற ஹேஷ்டேக்கில் இது தொடர்பான விவரங்களை ஷேர் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

விரட்டிய இருவரை மிதித்து கொன்ற யானை – கிருஷ்ணகிரியில் சோகம்

மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் மரணம்