பெண் சாதனையாளர்களிடம் தனது டிவிட்டர் பக்கத்தை ஒப்படைத்தார் பிரதமர்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடம் டிவிட்டர் பக்கத்தை ஒப்படைத்தார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் வழங்கவுள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்றால் #SheInspireUs ஹேஷ்டேக்கில் சாதனைகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு கூறினார்.

அந்தவகையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் பிரதமர் மோடி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிப்பர் என்றும் 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை டிவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

What do you think?

‘கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்’ இந்தியாவில் 39 ஆக உயர்வு!

‘ மார்ச் 15’ நாள் குறித்த விஜய், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!