‘ஹோலி பண்டிகையில் பங்கேற்க போவதில்லை’ மோடி அதிரடி!

ஹோலி பண்டிகையில் தான் பங்கேற்க போவதில்லை என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 60 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த நோய் மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில் இந்நோய் வேகமாக பரவுகிறது.

இந்த நிலையில் வர இருக்கின்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா பரவாமல் தடுக்க தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வந்தால் வாயை துணியால் மூடிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். அதே நேரத்தில் பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவுகிறது. எனவே அதை தவிர்க்க வேண்டும் என சர்வதேச நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆகவே, இந்த ஆண்டு ஹோலி பண்டிகையில் நான் பங்கேற்பதில்லை என தீர்மானித்து இருக்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

What do you think?

‘Magician-ஆக மாறிய பிரபல நடிகை சன்னி லியோன்’ வைரலாகும் வீடியோ உள்ளே:-

நாளை விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் GSLV-F 10 ராக்கெட்!