ADVERTISEMENT
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஒன்றிய அரசு அழைப்பு
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளார்.
வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிர்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சா்கள் 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், மீண்டும் டெல்லியில் முற்றுகையிட விவசாயிகள் புறப்பட்டனர்.
சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தகர்ப்பதற்காக ஜேசிபி போன்ற இயந்திரங்களுடன் 14,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் படையெடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி நோக்கி சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் விவசாயிகளை 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.