மனைவியை சரமாறியாக வெட்டிய காவலர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். 33 வயதான இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா என்ற 23 வயது பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது.
கூட்டு குடும்பமாக வாழ்ந்த வந்த நிலையில் இவர்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஷர்மிளா அவருடைய கணவர் வேலை பார்க்கும் ஊரில் வாழ்ந்து வந்தார்.
பின்னர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தையை பார்க்க தன்னுடைய கணவரும் அவரது குடும்பத்தினரும் நேரில் பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து தனக்கும் குழந்தைக்கும் ஜீவனாம்சம் கேட்டு பரமக்குடி கோட்டில் சர்மிளா வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில் நாகேந்திரன் விடுமுறையில் அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கோர்ட் மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸ் கிடைத்ததால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் சம்பவத்தன்று இரவு கையில் அரிவாளோடு தன்னுடைய மனைவி வீட்டிற்கு சென்று அவரோடு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் நாகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்