காவலர் தேர்விலும் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆயிரம் பேர்..! – விசாரணையில் அம்பலம்

காவலர் தேர்வில் ஆயிரம் பேர் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8 ஆயிரத்து 826 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்றபோது ஆயிரம் பேரின் விளையாட்டு சான்றிதழ் போலியானது என்பது கண்டறியப்பட்டது.

இதனை மறுத்துள்ள தேர்வர்கள் கடந்த 2017 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் இதுபோல ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 10% பணிகள் விளையாட்டு பிரிவிற்கு ஒதுக்கப்படுகிறது. இந்த பிரிவில் பணியில் சேர போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர சிலர் முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அதிகம் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

What do you think?

அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்..!