காவலர் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கோரி வழக்கு

காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் 47,000 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால், குரூப் 4 தேர்வை போல் இந்த தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக சமூகவலைதளத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பிட்ட இரண்டு தேர்வு மையங்களில் கூகுள் பயன்படுத்தி பதில்கள் எழுதியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த அண்டு நடைபெற்ற காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இந்தியாவில் இறைச்சிக்கு கட்டுப்பாடு?

இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை! – CAB