February 27, 2020
Madhimugam
Exclusive தமிழ்நாடு

பப்ஜி விளையாட்டில் மோகம்; பேரனே பாட்டியை கொன்ற சோகம்!

சென்னையில் பப்ஜி விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால், சொந்த பாட்டியையே கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆவடியை அடுத்துள்ள கண்ணபாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. 70 வயதான இவர், கடந்த 7-ஆம் தேதி அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மல்லிகாவின் சகோதரியின் பேரன் கோகுல் (வயது-20), அவரது நண்பரான 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் அளித்த வாக்குமூலத்தை கேட்ட போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அயனாவரத்தில் வசித்து வரும் கோகுல் வெல்டிங் பிரிவில் டிப்ளமோ படித்துவிட்டு சிறுசிறு வேலைகள் பார்த்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென பப்ஜி விளையாட்டின் மீது ஆர்வம் வரவே, அதற்கு அடிமையாகி வேலைக்கு செல்வதையே தவிர்த்து வந்துள்ளார். இதனால் வாடகை கொடுக்க முடியாமல் வீட்டு உரிமையாளருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோகுலுக்கு பாட்டி மல்லிகாவின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி மறைந்ததும், மாதம் 18,000 ரூபாய் ஓய்வுதியம் மல்லிகாவிற்கு கிடைப்பதும் நினைவில் வந்துள்ளது. இதையடுத்து மல்லிகாவிடம் பணம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கோகுலும், அவரது நண்பர் 17 வயது சிறுவனும் சென்றுள்ளனர். அச்சமயம் மல்லிகா மது போதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

கோகுல் பாட்டி மல்லிகாவிடம் பணம் கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுலும் அவரது நண்பரும் மல்லிகாவை கீழே தள்ளி கொலை செய்துள்ளனர். பின்னர் மல்லிகாவின் நகையை எடுத்துக் கொண்டு அயனாவரத்தில் உள்ள அடகு கடையில் வைத்து பணம் பெற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கோகுலின் தாயார், தனது மகன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையானதே இந்த அவலத்திற்கு காரணம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Related posts

‘வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்’ ஆச்சிரியத்தில் பொதுமக்கள்

Digital Team

ஏர் இந்தியா, சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மோடி பாராட்டு

Digital Team

வேலைவாய்ப்புகள் குறித்த வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

Digital Team

ஆர்சிபியின் கூல் லோகோ – பும்ரா கிண்டல்

Digital Team

இடஒதுக்கீடு தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..!

Digital Team

பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam