‘பிராய்லர் கோழியில் கொரோனா வைரஸ் தாக்குதல்’ Whatsappல் வதந்தி பரப்பியவர் கைது!

கோழி கறியில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக Whatsappல் வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனாவால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த பல வதந்திகளும் அவ்வப்போது பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு Whatsappல் பரவிய ஒரு செய்தியில், ” சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பிராய்லர் கோழிக்கடைகளில் உள்ள கோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்குதல் உள்ளதாகவும், எனவே யாரும் கோழி இறைச்சியை உண்ணவேண்டாம் என்றும் மேலும் இதனை மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த தகவலை அனைவருக்கும் பரப்பும்படி உண்மைக்கு புறம்பான தகவல் ஒன்று பரவியது.

இதையடுத்து இவ்வாறு பொய் செய்திகளை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கரூர் மாவட்டம் தென்னிலையைச் சேர்ந்த பெரியசாமி என்பவரை கைது செய்தது. இவரது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து தான் இந்த தகவல் பரவியுள்ளது. மேலும் பெரியசாமியும் பொய்யான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

What do you think?

‘இலங்கை லெஜண்ட்ஸை பேட்டிங்கால் துவம்சம் செய்த இர்பான் பதான்’ இந்திய லெஜண்ட்ஸ் வெற்றி!

‘உடல் எடையை குறைத்து செம ஒல்லியாக மாறிய நடிகை மீனா’ வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-