சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கேகே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி( DBS) ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏடிஎம் இயந்திரத்தை பெரிய கற்களை போட்டு உடைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக வங்கியின் ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து கேகே நகர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மர்ம நபரை காணவில்லை. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கேகே நகர் போலீசார் தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட நபரை கே.கே.நகர் போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.