காவல் அதிகாரி தற்கொலை…!! தற்கொலைக்கான காரணம்..?
காவலரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த செல்லக்குமார் கடந்த 2ம் தேதி சின்னப் பள்ளம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ஓட்டுனருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் காவலர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 10ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே தனது மகன் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரின் தந்தை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..