தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பா..!! போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை செய்யப்படும் தக்காளி..!!
தொடர்ந்து குறையாமல் உயர்ந்து வரும் தங்கத்திற்கு நிகராக தக்காளி இன்று உச்சத்தில் நிற்கிறது. தக்காளி விலை மார்க்கெட்டில் விலை அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால்.., ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
விலை உயர்வை தடுத்து மக்களுக்கு சரியான விலைக்கு தக்காளி கொடுக்க வேண்டும் என்பதற்காக சென்னை பண்ணை பசுமை கடைகள், கூட்டுறவு சிறப்பு அங்காடிகள், மற்றும் நியாயவிலை கடைகள் என 500இடங்களில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
அதன் பெயரில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ” காமதேனு சிறப்பு அங்காடி” முன் இன்று காலை 6 மணி முதலே தக்காளி வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர். அதிக மக்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இருந்தும் ஒரு சிலர் முந்தி அடித்துக்கொண்டு.., எப்படியாவது கூட்டத்தில் புகுந்து தக்காளியை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கில் கூட்டத்தில் புகுந்துள்ளனர்.., அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் ஒருவர் நீயாவது ஒரு கிலோ தக்காளி வாங்கி குடுமா என கேட்க, அதற்கு அந்த பெண் காவலர் நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா என கேட்டுள்ளார்.
இந்த நிலை குறித்து செய்தியார்களிடம் பேசிய பொது மக்கள்.., ஒரு கிலோ தக்காளிகாக 3 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. மார்க்கெட்டிலும் விலை குறைவாக விற்கப்பட்டால் இந்த பிரச்சனையே இருக்காது. தக்காளி இல்லாமல் எத்தனை உணவுகளை சமைக்க முடியும்.., அப்படி சமைத்தாலும் ஒரு சில உணவுகள் மட்டுமே தானே உள்ளது.
தமிழக அரசு பொது மக்களின் இந்த வேண்டுகோளை எடுத்து தக்காளிவிலையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..